வாழ்வின் பொருளுணர,
சென்ற வழி நெடுக,
கண்ட எலாம் கசக்க,
செல்ல வழி அறியா,
செல்ல பிள்ளைபோல,
நின்ற உனை நகைத்த,
மாந்தர் உம் மக்களே.
வேதனை பல,
சோதனை பல,
தாண்டினாய் என்றோ!
மீண்டுமாய் இங்கு,
நிற்கிறாய் வெகு
பாரத் துடனே.
எழமுடியா
என்றும் விடியா
இருள் ஏன் உனக்கு?
வாழ்வின் பொருளுணர்ந்தே!
பயணத் தைத் தொடர்ந்தே!
அடி அடியாய்
அடித்து உனை
முடமாக்கிட நினைத்தனரே
மீண்டும்,
பிறர் நகைக்க,
வலி பொறுத்து
சுகம் வெறுத்து
எழவே முயல்வாய்
கால் ஊன்றி
தடை தாண்டி
அடைவாய் இலக்கை!